டைட்டானிக் பற்றிய ஆவணப்படம் வெளியிடும் கேமரூன்

டைட்டானிக் பற்றிய ஆவணப்படம் வெளியிடும் கேமரூன்
டைட்டானிக் பற்றிய ஆவணப்படம் வெளியிடும் கேமரூன்

உலக அளவில் பிரபலமான டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ஆவணப்படம் ஒன்று வெளியாக இருக்கிறது. 

உலகம் முழுவதும் காதலர்களால் இன்று வரை கொண்டாடப்படும் படம் டைட்டானிக். இப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியிருந்தார். தமிழகத்தில் பல திரையரங்குகளில் 100 நாள் வரை ஓடிய பிரமாண்ட வெற்றி படமான டைட்டானிக், பாக்ஸ் ஆபிஸ் ஹிட் பட்டியலில் இன்று வரை 2வது இடத்தில் உள்ளது. இந்நிலையில், டைட்டானிக் திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததை மறக்கமுடியாத நிகழ்வாக கொண்டாட நினைக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் டைட்டானிக் குறித்த ஒரு மணி நேர ஆவணப்படத்தை இயக்கி வருகிறார். டைட்டானிக் படத்திற்காக கதை எழுதப்பட்டது தொடங்கி படம் வெளியானது வரையிலான நிகழ்வுகள் இதில் இடம்பெற உள்ளது. வரும் டிசம்பர் மாதம் இந்த ஆவணப்படம் வெளியாக இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com