புதிய டிக்கெட் கட்டணத்தை ஏற்க முடியாது: திரையரங்க உரிமையாளர்கள் சங்கம்
புதிய டிக்கெட் கட்டணத்தை ஏற்க முடியாது என்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தின் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தை சார்ந்த திருப்பூர் சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மேலும் அவர், தமிழக அரசு பிறப்பித்துள்ள இந்த அரசாணை தமிழகத்திலுள்ள மல்ட்டிஃபிலக்ஸ் தியேட்டர்களை தவிர்த்து வேறு எந்த தியேட்டர்களும் இயங்க முடியாத நிலைமைக்கு தள்ளியுள்ளது. இந்தக் கட்டணத்தின் படி பார்த்தால் மல்டிஃபிலக்ஸ் தியேட்டர்களை தவித்து வேறு யாராலும் நேர்மையாக தொழில் செய்ய இயலாது. நாங்கள் அதிகபட்சம் கட்டணமாக 140 ரூபாய் விலை உயர்த்தி கேட்டோம். ஆனால் அரசு ரூபாய் 62.50 காசு வரை உயர்த்தியுள்ளது. இதை வைத்து எந்த தியேட்டரையும் நடத்த முடியாது. ஆகவே திங்கள் அல்லது செவ்வாய் அன்று தமிழக முழுக்க உள்ள தியேட்டர் உரிமையாளர்களை அழைத்து விவாதிக்க உள்ளோம். அரசு அமைத்துள்ள குழுவை சந்தித்து முறையிட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்.