\
டிக் டிக் டிக் ட்ரெய்லர் வெளியானது

டிக் டிக் டிக் ட்ரெய்லர் வெளியானது

டிக் டிக் டிக் ட்ரெய்லர் வெளியானது
Published on

ஜெயம் ரவி நடிக்கும் டிக் டிக் டிக் ட்ரெய்லர் இன்று வெளியாகி உள்ளது.

மிருதன் படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் எடுத்திருக்கும் திரைப்படம் 'டிக் டிக் டிக்'. இது ஒரு சயின்ஸ் ஃபிக்‌ஷன் மூவி. விண்வெளி சம்பந்தப்பட்ட கதை என்று முன்பே தகவல் வெளியானது. அதை உறுதி செய்துள்ளது ட்ரெய்லர். 
சென்னையில் விழுந்த விண்கல்லால் வரும் ஆபத்தை விளக்கி நகரும் ட்ரெய்லர் பெரிய சஸ்பென்ஸை முன் வைத்திருக்கிறது. ‘நம்மதான் ஜெயிக்கணும்.’ என வசனம் பேசும் ஜெயம் ரவி மெர்சல் விஜய்யை போல ஒரு மேஜிக் கலைஞராக சீட்டுக் கட்டுகளை ட்ரெய்லரில் சிதறவிடுகிறார். 
நிவேதா பெத்துராஜ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்திருக்கிறார். மிக முக்கியமாக ஜெயம் ரவி மகன் ஆரவ் நடித்திருக்கிறார். அவரது மகன் இடம் பெற்றுள்ள காட்சியும் ட்ரெய்லரில் இடம் பிடித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com