\
பெஃப்சி தொழிலாளர்கள் இல்லாமல் தொடரும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு

பெஃப்சி தொழிலாளர்கள் இல்லாமல் தொடரும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு

பெஃப்சி தொழிலாளர்கள் இல்லாமல் தொடரும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு
Published on

பெஃப்சி தொழிலாளர்கள் வராத நிலையில் மாற்றுத் தொழிலாளர்களை வைத்து விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

பெஃப்சி தொழிலாளர்களுக்கும், திரைப்பட சங்கத்தினருக்கும் இடையே சம்பளப் பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் இன்று முதல் பெஃப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் பெஃப்சி தொழிலாளர்கள் வேலைக்கு வரவில்லை என்றால் மாற்றுத் தொழிலாளர்களை வைத்து படப்பிடிப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பெஃப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘துப்பறிவாளன்’ படப்பிடிப்பு மாற்றுத் தொழிலாளர்களை வைத்து எந்த பாதிப்பும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. துப்பறிவாளன் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே திட்டமிட்டப்படி சிதம்பரத்தில் இன்றும் நடைபெற்று வருகிறது. ஃபெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறும் என துப்பறிவாளன் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com