துப்பறிவாளனுடன் ‘மாணிக்’ பர்ஸ்ட் லுக்!

துப்பறிவாளனுடன் ‘மாணிக்’ பர்ஸ்ட் லுக்!
துப்பறிவாளனுடன் ‘மாணிக்’  பர்ஸ்ட் லுக்!

மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் ‘மாணிக்’ படத்தின் பர்ஸ்ட் லுக்கை நடிகர் விஷால் வெளியிட்டார்

மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மாணிக்’. ஹீரோயினாக ‘எதிர் நீச்சல்’ சூசா குமார் நடித்துள்ளார். பல குறும்படங்களை இயக்கிய மார்டின் இயக்கியுள்ளார். மோஹிதா சினி டாக்கீஸ் சார்பாக மா.சுப்பிரமணியம் தயாரித்துள்ள இந்தப்படம் ஃபேன்டசி கலந்த காமெடி படமாக உருவாகியுள்ளது ’பாட்ஷா’ ரஜினி கெட்டப்பில் இந்தப்படத்தின் டிசைன்கள் வெளியாகி எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஷால் வெளியிட்டார். 

இந்த நிகழ்வின் போது ஹீரோ மா.கா.பா.ஆனந்த், இயக்குநர் மார்டின், தயாரிப்பாளர் எம்.சுப்பிரமணியம், ஒளிப்பதிவாளர் எம்.ஆர்.பழனிகுமார், எடிட்டர் கே.எம்.ரியாஸ், இணை இயக்குநர் மணி ஆகியோர் உடன் இருந்தார்கள்.  படத்தின் டீசரை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com