நீ நான் என போட்டிப்போட்டு வியூஸ்களை அள்ளும் துணிவு, வாரிசு: Insta-ல் செய்த சம்பவம் இதோ!

நீ நான் என போட்டிப்போட்டு வியூஸ்களை அள்ளும் துணிவு, வாரிசு: Insta-ல் செய்த சம்பவம் இதோ!
நீ நான் என போட்டிப்போட்டு வியூஸ்களை அள்ளும் துணிவு, வாரிசு: Insta-ல் செய்த சம்பவம் இதோ!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதி அஜித்தின் துணிவும், விஜய்யின் வாரிசும் வெளியாக இருக்கிறது. இரண்டு படத்தின் ட்ரெய்லர்களும் வெளியாகி ரசிகர்களின் ஆவலை மேலும் அதிகப்படுத்தியிருக்கிறது.

இதில் எந்த படத்தின் ட்ரெய்லர் சாதனை படைத்தது என்ற போட்டாப்போட்டியே ரசிகர்களிடையே நிலவி வருகிறது. அதன்படி துணிவு ட்ரெய்லர் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையில் 56 மில்லியன் வியூஸும், வாரிசு ட்ரெய்லர் வெளியாகி இரண்டே நாட்கள் ஆன நிலையில் 36 மில்லியன் வியூஸும் பெற்றிருக்கிறது. இதுபோக துணிவுக்கு ஒன்றரை மில்லியன் லைக்ஸும், வாரிசுக்கு 20 லட்சத்துக்கும் மேலான லைக்ஸும் பெற்றிருக்கிறது.

இப்படியாக வாரிசு vs துணிவுக்கான போட்டி தொடர்ந்து கணக்கிடப்பட்டு வரும் நிலையில் இன்ஸ்டாகிராம் தளத்தில் எந்த படத்தின் பாடலுக்கு ஒரு லட்சம் ரீல்ஸ் எத்தனை நாளுக்குள் போடப்பட்டிருக்கிறது என்ற தகவலும் வெளியாகியிருக்கிறது.

அதன்படி நவம்பர் 5ல் வெளியான வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலுக்கான ரீல்ஸ் கணக்கு ஒரு லட்சத்தை அடைய 45 நாட்கள் ஆனதாகவும், கடந்த டிசம்பர் 9ல் வெளியான துணிவு படத்தின் சில்லா சில்லா பாடலுக்கான ரீல்ஸ் ஒரு லட்சத்தை அடைய வெறும் 25 நாட்களே ஆனதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

அதேவேளையில் யூடியூபில் ரஞ்சிதமே பாடலுக்கு 126 மில்லியன் வியூசும், சில்லா சில்லா பாடலுக்கு 30 மில்லியன் வியூசுமே பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com