\
மெர்சலுக்காக விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்த மூவர்!

மெர்சலுக்காக விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்த மூவர்!

மெர்சலுக்காக விஜய்க்கு மேஜிக் கற்றுக்கொடுத்த மூவர்!
Published on

அட்லீ இயக்கத்தில் மெர்சல் படத்தில் நடித்துள்ள விஜய் அந்தப் படத்திற்காக மூவரிடம் மேஜிக் கற்றுக்கொண்டு நடித்துள்ளார்.

மெர்சல் படத்தில் மூன்று கதாபாத்திரங்களில் நடித்துள்ள விஜய் மேஜிக் நிபுணராகவும் வருகிறார். கொஞ்சம் மேஜிக் பற்றிய விஷயங்களை அறிந்து கொண்டால் தான் இந்த பாத்திரத்தில் தத்ரூபமாக நடிக்க முடியும் என்பதற்காக அவருக்கு மேஜிக் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து வந்த மேஜிக் நிபுணர்கள் விஜய்க்கு மேஜிக் கற்றுக் கொடுத்துள்ளனர்.

இதுகுறித்து மேஜிக் நிபுணரான கோகோ ரெக்யூம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஜோசப் விஜய் இந்தியாவில் உள்ள தமிழகத்தின் மிகப் பிரபலமான நடிகர். விரைவில் வெளியாகவுள்ள தனது திரைப்படத்திற்காக கடந்த 2017 மே மாதம் அவருடன் பணியாற்றியதை மிகப்பெருமையாகக் கருதுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com