\
இனி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: எமிஜாக்சன்

இனி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: எமிஜாக்சன்

இனி ஆடம்பர பிறந்தநாள் கொண்டாட்டம் இல்லை: எமிஜாக்சன்
Published on: 

இனிமேல் ஆடம்பரமான பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபாடு கொள்ள போவதில்லை என நடிகை எமிஜாக்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்த் பிரஜை நடிகை எமிஜாக்சன். ‘மதராசபட்டினம்’ படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஹாலிவுட் மாடல். தமிழில் அறிமுகமானாலும் பிறகு கிடைத்த வாய்ப்புகளால் பாலிவுட் பக்கம் இவர் போனார். இப்போது ரஜினியின் ‘2.0’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் ஆதரவற்ற சிறுவர்களுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், “எனது தோழி கரோலின் உடன் இணைந்து ஆதரவற்ற குழந்தைகளின் வளர்ச்சிக்காக வேலை செய்து வருகிறேன். பனிரெண்டு மாதமாக அந்தப் பணியில் என்னை ஈடுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் மனம் மகிழ்ச்சியில் நிறைந்துள்ளது. 

இந்தக் குழந்தைகள் பெரும்பாலும் ஏழ்மையாலும் நோயினாலும் பீடிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உணவுக்காக, வாழ்வாதாரத்திற்காக ரசேல் தொண்டுகளை செய்து வருகிறார். எனவே இந்த ஆண்டில் இருந்து ஒரு முடிவெடுத்திருக்கிறேன். வழக்கமான என் ஆடம்பர பிறந்த நாளை இனி தவிர்க்கப் போகிறேன். பார்ட்டி ட்ரெஸஸ், கேக் வகைகள்,  விலை உயர்ந்த உணவுகளோடு இனி கொண்டாட போவதில்லை. இந்த ஆதரவற்ற தேவைதளோடு என் பிறந்த நாளை பகிர்ந்து கொள்ள போகிறேன். அதை எப்படி செய்ய போகிறேன் என்பதை விரைவில் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com