துப்பறிவாளன், மகளிர் மட்டும்...திரைப்பட ப்ரியர்களுக்கு இந்த வார விருந்து

துப்பறிவாளன், மகளிர் மட்டும்...திரைப்பட ப்ரியர்களுக்கு இந்த வார விருந்து
துப்பறிவாளன், மகளிர் மட்டும்...திரைப்பட ப்ரியர்களுக்கு இந்த வார விருந்து

பொழுதுபோக்குப்பிரியர்களின் கொண்டாட்டத்திற்குரியவை திரைப்படங்கள். திரைப்படப்பிரியர்களுக்காக தமிழ் திரை உலகில் இன்று மகளிர் மட்டும், துப்பறிவாளன் போன்ற திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

விஷால், மிஷ்கின் கூட்டணியில் தொடங்கப்பட்டதில் இருந்தே ஒருவித எதிர்பார்ப்பை ஏற்படுத்திய திரைப்படம் துப்பறிவாளன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் தற்போது திரைக்கு வந்திருக்கிறது. மிஷ்கினின் வித்தியாசமான படமாக்கலுடன், விஷால் நடிப்பு, துப்பறியும் காட்சிகள் என ரசனையான சினிமா ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது துப்பறிவாளன். அதோடு, பிரசன்னா, விநய், பாக்யராஜ் உள்ளிட்டோரின் தனித்துவமிக்க பாத்திர படைப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை ஆகியவையும் துப்பறிவாளன் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன.

குற்றம் கடிதல் எனும் திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குநர் பிரம்மாவின் இரண்டாவது திரைப்படம் மகளிர் மட்டும். பெயருக்கேற்ப ஜோதிகா, பானுப்ரியா, சரண்யா, ஊர்வசி என முன்னணி நடிகைகளை திரைக்கதையில் உலவ விட்டு கவனம் ஈர்த்திருக்கிறார் பிரம்மா. ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் அன்றாட பிரச்னைகளை, சமகால மாற்றங்களையும் ஒரு சேர மகளிர் மட்டும் திரைப்படம் பதிவு செய்திருக்கிறது

துப்பறிவாளன், மகளிர் மட்டும் திரைப்படங்களோடு கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள களத்தூர் கிராமம் திரைப்படமும் வெளிவந்திருக்கிறது. கிஷோர், மேக்னா நடித்துள்ள இந்தப் படத்தை சரண் கே அத்வைதன் இயக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com