\
திரெளபதி ஆகிறார் நயன்தாரா!

திரெளபதி ஆகிறார் நயன்தாரா!

திரெளபதி ஆகிறார் நயன்தாரா!
Published on

கன்னட படத்தில் திரெளபதியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் அதிகமாக நடித்துவரும் நயன்தாரா, கன்னடத்தில் ’சூப்பர்’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார். இப்போது ’குருஷேத்திரா’ என்ற படம் கன்னடத்தில் உருவாகிறது. காஸ்ட்லி கன்னட படமான இதில், தர்ஷன் ஹீரோ. அவர் துரியோதனனாக நடிக்கிறார். ரவிச்சந்திரன், கர்ணனாக நடிக்கிறார். நாகண்ணா இயக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா திரெளபதியாக நடித்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அவரிடம் பேசி வருகின்றனர். நயன்தாரா இன்னும் ஓகே சொல்லவில்லை எனப் படக்குழு கூறியுள்ளது. அவர் நடிக்க சம்மதித்தால் இது அவருக்கு 2-வது கன்னட படமாக இருக்கும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com