சினிமா
இந்த மாதம் 30ல் திரைக்கு வருகிறது ‘திருட்டுப் பயலே2’
இந்த மாதம் 30ல் திரைக்கு வருகிறது ‘திருட்டுப் பயலே2’
’திருட்டுப் பயலே2’ வரும் 30ம் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ்,அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கும் திரைப்படம் திருட்டுப் பயலே 2. இதே தலைப்பில் இதற்கு முன் இவர் ஒரு படத்தை இயக்கி இருந்தார். அது வசூல் அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் இரண்டாம் பாகமாக இப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் பிரசன்னா, பாபிசிம்ஹா, அமலாபால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நவம்பர் மாதம் 30ம் தேதி இப்படம் உலகம் எங்கும் திரையில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளது.