ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணையும் அஜித்?

ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணையும் அஜித்?
ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணையும் அஜித்?

`வலிமை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்தப் படத்தையும் ‘வலிமை’ படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரே தயாரிப்பார் என சொல்லப்படுகிறது.

முன்னதாக `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித், ஹெச்.வினோத், போனிகபூர் கூட்டணி இணைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்துதான், ‘வலிமை’ உருவாகி வருகிறது. கொரோனா காரணமாக ‘வலிமை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது. ஆகவே படம் குறித்த முதற்கட்ட தகவல்கள் பற்றிய அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

சூழல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனாலும், ‘வலிமை’ படத்தை, எப்படியாவது ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிட்டுவிட வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் போனி கபூர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. அதே உறுதியுடன் அஜித், ஹெச்.வினோத் கூட்டணியில் மீண்டும் ஒரு படத்தை அவரே தயாரிக்கிறார். இதுபற்றிய தகவல்கள், சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதை உறுதிசெய்யும் வகையில், அந்த படத்துக்கு நடிகர் அஜித் தற்போது கால்ஷீட் கொடுத்திருப்பதாக தற்போது செய்திகள் வெளிவந்துள்ளன.

‘வலிமை’ போல அல்லாமல், அடுத்த படத்தை, குறைந்த நாட்களில் படமாக்க வேண்டும் என்றும், அதற்காக 65 நாட்கள் மட்டுமே நடிகர் அஜித் கால்ஷீட் கொடுத்துள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த படப்பிடிப்பு, ஜுலை 2021, அதாவது ’வலிமை’ படத்தின் ரிலீஸுக்கு முன்பே தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com