’என்னை பலர் ஏய்ச்சிருக்காங்க’: நடிகை கஸ்தூரி பகீர் புகார்!

’என்னை பலர் ஏய்ச்சிருக்காங்க’: நடிகை கஸ்தூரி பகீர் புகார்!

’என்னை பலர் ஏய்ச்சிருக்காங்க’: நடிகை கஸ்தூரி பகீர் புகார்!
Published on

பண விவகாரத்தில் தன்னை பலர் ஏமாற்றியுள்ளதாக நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னாள் ஹீரோயின் கஸ்தூரி. தற்போது அரசியல் விவாதங்களில் இடம்பெற்று வரும் அவ்வப்போது சமூக வலைத் தளங்களில் கருத்துக்களைப் பதிவிட்டு பரபரப்பு கிளப்பி வருபவர். அரசியல் சமூகப் பிரச்னைகளை விமர்சித்து வரும் இவர், காஞ்சிபுரம் சிலை மோசடி விவகாரம் குறித்து கருத்து பதிவிட்டிருந்தார். அதில் அரசு துறைகள் என்றாலே லஞ்சம், மோசடி திருட்டு என்பது வாடிக்கையாகி விட்டது எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து விவேக் பிரேம் என்ற ரசிகர், ’நீங்கள் நடித்து வாங்கிய ஊதியத்துக்கு உரிய வருமான வரி செலுத்தியிருக்கீங்களா?’ என அவரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். 

அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, 'நான் வரி ஏய்ச்சதில்லை, என்னை பலர் காசு விஷயத்துல ஏய்ச்சிருக்காங்க! பேசிய ஊதியத்தையே வாங்காம நாமம் போட்டுக்கிட்டதுதான் அதிகம்! ’தமிழ்படம் 2’வில் காட்டுவது போல் மழையில் கஷ்டப்பட்டு பாடி ஆடி கடைசியில மூணு ரூபா சம்பளம், அது போல தான்!' என்று கூறியுள்ளார்.

இதையடுத்து ரசிகர்கள் பலர், அவருக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார். கஸ்தூரியின் கருத்து வியப்பாக உள்ளதாகவும் தெரிவித்து ள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com