விஜய் நடிப்பில் வெளியான ‘தெறி’ தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
அட்லீ இயக்கத்தின் 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தெறி’. விஜய் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம் தமிழில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்தது. அந்த ஆண்டில் அதிகமான வசூலை குவித்தது. 150 கோடிக்கு மேல் வசூலானதால் இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யின் விருப்பப் பட்டியலில் இடம் பிடித்தார். அடுத்து ‘மெர்சல்’ மூலம் மாபெரும் வசூல் சாதனையை அவர் ஏற்படுத்திக் கொடுத்தார்.
தமிழில் ‘தெறி’வெளியான போதே ’போலீசுடு’ என்ற பெயரில் அது தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. ஆனால் அது எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை. ஆந்திர சினிமாவில் சுமார் ரக வசூலை பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தை தெலுங்கின் ரசனைக்கு ஏற்ப ஸ்ரீனு வைட்லா இயக்க உள்ளார். அதில் ரவி தேஜா நடிக்க உள்ளார். கேத்ரின் தெரசா மற்றும் எமிஜாக்சன் நடிக்க உள்ளனர். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ளனர்.