\
தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல்

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல்

தீபாவளிக்கு புதிய படங்கள் வெளியாவதில் சிக்கல்
Published on

கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி தமிழக அரசுடன் திரைத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி வரும்‌ நிலையில், தீபாவளியை ஒட்டி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட படங்கள் வெளியாகுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

கேளிக்கை வரியை ரத்து செய்யக்கோரி கடந்த வாரம் முதல் திரைத்துறையினர் புதிய படங்கள் வெளிவராமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதுதொடர்பாக தயாரிப்பாளர் சங்கம், விநியோகிஸ்தர்கள் சங்கம், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், அமைச்சர்களுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் மெர்சல், கொடிவீரன், அறம் உள்ளிட்ட திரைப்படங்கள் தீபாளிக்கு திரைக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இதற்கிடையில் பேச்சுவார்த்தையில் சுமூகமான தீர்வு கிடைக்கும் எனவும், தங்களது திரைப்படங்கள் கண்டிப்பாக வெளியாகும் என்று ‌படக்குழுவினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com