\
ஜூலை 7-ல் வெளியாகிறது விஜய் படம்

ஜூலை 7-ல் வெளியாகிறது விஜய் படம்

ஜூலை 7-ல் வெளியாகிறது விஜய் படம்
Published on

விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படம் தெலுங்கில் ஜூலை 7-ம் தேதி ரிலீஸாக உள்ளது.

விஜய்- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான பைரவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பரதன் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். கோலிவுட்டில் பைரவா ஹிட்டானதை தொடர்ந்து "ஏஜெண்ட் பைரவா" என்ற பெயரில் தெலுங்கிலும் இப்படம் டப் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்படம் வரும் ஜூலை 7-ஆம் தேதி ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் திரைக்கு வருகிறது. இதனால் அங்குள்ள விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com