தியேட்டரில் வெளியான மாஸ்டர் டீஸர் - ரசிகர்களுடன் கண்டுகளித்த படக்குழு

தியேட்டரில் வெளியான மாஸ்டர் டீஸர் - ரசிகர்களுடன் கண்டுகளித்த படக்குழு
தியேட்டரில் வெளியான மாஸ்டர் டீஸர் - ரசிகர்களுடன்  கண்டுகளித்த படக்குழு

மாஸ்டர் படத்தின் டீஸரை அப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் திரையரங்கில் விஜய் ரசிகர்களுடன் கண்டு களித்துள்ளனர். 

 “மாநகரம்” , “கைதி”  படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் “மாஸ்டர்”. இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் ஷாந்தனு,“கைதி”பட புகழ் அர்ஜூன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  அனிருத் இசையமைப்பில் வெளியான அனைத்துப் பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், “வாத்தி கம்மிங்” பட்டித் தொட்டியெல்லாம் பரவி பட்டையை கிளப்பியது.

படத்தின் டீஸர் குறித்த அப்டேட்டை விஜய ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கேட்டு வந்த நிலையில், இன்று படத்தின் டீஸர் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்தது. அதன்படி மாலை 6 மணிக்கு படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. விஜய் ரசிகர்களுக்காக பிரேத்யமாக பல திரையரங்குகளிலும் மாஸ்டர் டீஸர் திரையிடப்பட்டது. அந்த வகையில் சென்னை ரோகினி திரையரங்கில் மாஸ்டர் டீஸர் திரையிடப்பட்ட நிலையில், அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுடன் டீஸரை கண்டுகளித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com