சினிமா
திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைப்பு
திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைப்பு
காணொளி மூலமாக இன்று நடைபெறவிருந்த திரையரங்க உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசிடம் திரையரங்குகளை திறக்க வலியுறுத்துவது, ஐ.பி.எல் போட்டிகளை ஒளிபரப்ப அனுமதி கேட்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்த திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
அதேபோல் திரையரங்குகளில் திரையிடப்படும் படங்களை ஒரு வருடத்திற்கு பிறகே OTT-யில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்றும் தயாரிப்பாளர்களுக்கு நிபந்தனை விதிக்க முடிவெடுத்திருந்தனர். இந்நிலையில் ஆலோசனைக் கூட்டம் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.