தமிழக திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்

தமிழக திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்
தமிழக திரையரங்குகள் நாளை முதல் இயங்கும்

தமிழகத்திலுள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் செயல்படும் என திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான‌ 8 சதவிகித வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், திரையரங்குகளின் இருக்கை எண்ணிக்கையை குறைக்க அனுமதிக்க வேண்டும், வருடத்திற்கு ஒருமுறை திரையரங்க உரிமத்தை புதுப்பிக்கும் முறையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையாக மாற்ற வேண்டும், திரையரங்க பராமரிப்புக் கட்டணம் ஏசிக்கு 5 ரூபாயும்,‌ ஏசி வசதி அல்லாததற்கு 3 ரூபாயும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை ‌வலியுறுத்தி கடந்த 16-ஆம் தேதி முதல் திரையரங்குகளை மூடி திரையரங்க உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தலைமைச்செயலகத்தில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமைச்சர் கேசி வீரமணி தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை  இன்று நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் ‌‌சார்பில் அபிராமி ராமநாதன், திருப்பூர் சுப்பிரமணியம், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். திரையரங்க உரிமை‌யாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அமைச்சர்கள் வாக்குறுதி அளித்ததையடுத்து, வேலைநிறுத்தத்தை திரும்பப்பெறுவதாக திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com