\
மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர் வெளியீடு எப்போது? - விவரம் உள்ளே!

மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர் வெளியீடு எப்போது? - விவரம் உள்ளே!

மூக்குத்தி அம்மன் ட்ரெய்லர் வெளியீடு எப்போது? - விவரம் உள்ளே!
Published on

நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகிறது. 

தமிழ் சினிமாவில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதையம்சங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை நயன்தாரா. அந்த வகையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். நடப்புலகில் பூமிக்கு அம்மன் வந்தால் என்னெவெல்லம் நடக்கும் என்பதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் மூக்குத்தி அம்மன் படமானது தீபாவளிக்கு ஓடிடி தளமான ஹாட்ஸ்டார் டிஸ்னி ப்ளஸில் வெளியாகும்  எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்படத்தில் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிப்பு வெளியாகியது. முன்னதாக நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் நெற்றிக்கண் படத்தின் போஸ்டர்  வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com