\
’ஓவியாவை விட்டா யாரு’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

’ஓவியாவை விட்டா யாரு’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

’ஓவியாவை விட்டா யாரு’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!
Published on: 

ஓவியா நடித்துள்ள ’ஓவியாவை விட்டா யாரு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்ட நடிகையாகி விட்டார் ஓவியா. அவரை வைத்து படமெடுக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு ஓய்வெடுத்து வருகிறார் ஓவியா. இந்நிலையில் அவர் நாயகியாக நடித்துள்ள ’ஓவியாவை விட்டா யாரு’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் அறிமுக நாயகன் சஞ்சீவ், செந்தில், பவர் ஸ்டார் சீனிவாசன், ராதாரவி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மதுரை செல்வம் தயாரித்துள்ள இப்படத்தை ராஜதுரை இயக்கி உள்ளார்.  இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீசாகும் என தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com