சினிமா
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்
விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தின் 3ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடக்கம்
விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது.
நெல்சான் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவின் தொடங்கியது. அதை முடித்துக்கொண்டு சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் அரங்கம் அமைத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பை நடத்தினர்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக ஓய்வில் இருந்த நடிகர் விஜய், இன்று முதல் 3ஆம் கட்ட படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார். இதற்கான படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர் பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

