பெஃப்சி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் படப்பிடிப்புகள் நடைபெறும்: பிரகாஷ்ராஜ்

பெஃப்சி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் படப்பிடிப்புகள் நடைபெறும்: பிரகாஷ்ராஜ்
பெஃப்சி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டாலும் படப்பிடிப்புகள் நடைபெறும்: பிரகாஷ்ராஜ்

பெஃப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தாலும் எந்த இடையூறுமின்றி படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெறும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க துணைத்தலைவர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

பெஃப்சி தொழிலாளர்களுக்கும், திரைப்பட சங்கத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்கம் மிகவும் தெளிவாக இருக்கிறது. சில விஷயங்கள் திரிக்கப்பட்டுள்ளன. அதைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை எங்களுக்கு இருக்கிறது. பெஃப்சி தொழிலாளர்களுடன் தயாரிப்பாளர்கள் பணியாற்ற மாட்டோம் என சொன்னதாக கூறப்படுகிறது. தொழிலாளர்கள் எங்களது எதிரிகளல்ல. அவர்களின் வயிற்றில் அடிப்பது எங்களின் நோக்கமுமல்ல. பெஃப்சி தொழிலாளர்களுடன் மட்டும் தான் வேலை பார்ப்போம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தொழிலாளர்கள் தங்களது சம்பளம் பற்றி பேசும் அதேவேளையில் நாங்கள் எங்களது உரிமை பற்றி பேசவும் தகுதியுள்ளது. சம்பளத்தை குறைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை. ஆனால் அதில் சில பொது நிபந்தனைகள் உள்ளன. அதனை நாங்கள் ஏற்கவில்லை. இது பல காலமாக இருக்கும் விஷயம் என்கிறார்கள். அதைத்தான் நாங்கள் ஏற்கவில்லை. தவறுகளை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

மேலும், “எந்த இடையூறு வந்தாலும் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடக்கும். வழக்கமான படப்பிடிப்பு பிரச்னைகள் வந்தால் அதை சமாளிக்கவும் தயாராக இருக்கிறோம். ஒளிப்பதிவு சங்கத்தினர் எங்களுக்கு ஆதரவு அளித்து படப்பிடிப்பில் பங்கேற்கின்றனர். அதேபோல் பல்வேறு துறை சார்ந்த கலைஞர்களும் ஆதரவளித்து வருகின்றனர். யாருடன் வேலை பார்ப்பது என்பது தயாரிப்பாளரின் உரிமை” என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com