இன்று மாலை 'தர்பார்' படத்தின் இரண்டாவது போஸ்டர்!
இன்று மாலை 6 மணிக்கு தர்பார் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ரஜினி காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
ஏற்கெனவே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அடுத்த போஸ்டர் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள லைகா, ஓணம் வாழ்த்துகள். இந்த நல்ல நாளில் ஆச்சரியத்திற்கு தயாராகுங்கள். மாலை 6 மணிக்கு தர்பார் செகண்ட் லுக் என தெரிவித்துள்ளது. தர்பார் திரைப்படம் ஜனவரி 14ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.