\
கௌதம் மேனனுக்கு பைக், சிம்புவுக்கு கார் - சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!

கௌதம் மேனனுக்கு பைக், சிம்புவுக்கு கார் - சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!

கௌதம் மேனனுக்கு பைக், சிம்புவுக்கு கார் - சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்!
Published on

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு வெற்றிப்பெற்றதை அடுத்து இயக்குனர் கவுதம் மேனன் மற்றும் நடிகர் சிம்பு இருவருக்கும் படத்தின் தயாரிப்பாளர் பரிசு வழங்கியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா, நீரஜ் மாதவ் நடிப்பில் உருவான படம் 'வெந்து தணிந்தது காடு'. செப் 15ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களே கிடைத்தாலும் வசூலில் நல்ல கலக்ஷனைப் பெற்றுள்ளது. இதனால் குஷியான படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குநருக்கும், நடிகருக்கும் பரிசளித்துள்ளார்.

கௌதம் மேனனுக்கு புல்லட் பைக் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். மேலும் படத்தின் சக்சஸ் மீட்டை நேற்று நடத்திய தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், அங்கு உயர்தர சொகுசு கார் ஒன்றை நடிகர் சிம்புவுக்கு பரிசாக அளித்துள்ளார். இந்த சக்சஸ் மீட்டில் நடிகர் சிவகார்த்திகேயனும் கலந்து கொண்டார். தற்போது புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com