\
அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் - வெளியான புகைப்படம்

அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் - வெளியான புகைப்படம்

அமெரிக்காவில் நடிகர் ரஜினிகாந்த் - வெளியான புகைப்படம்
Published on: 
அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, வெளிநாட்டுக்கு சிகிச்சைக்குச் செல்லாமல் இருந்தார். தற்போது அமெரிக்காவில் பாதிப்பு குறைந்ததால் அவர் உடல் பரிசோதனை செய்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார். இந்தியாவிலிருந்து வருபவர்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதித்துள்ளதால் மத்திய அரசிடம் அனுமதி பெற்று தனி விமானம் மூலம் கடந்த 19-ம் தேதி ரஜினிகாந்த் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யாவுடன் ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com