\
’வீரபாண்டியபுரம்’: சுசீந்திரன் - ஜெய் படத்தின் தலைப்பு மாற்றம்

’வீரபாண்டியபுரம்’: சுசீந்திரன் - ஜெய் படத்தின் தலைப்பு மாற்றம்

’வீரபாண்டியபுரம்’: சுசீந்திரன் - ஜெய் படத்தின் தலைப்பு மாற்றம்
Published on

சுசீந்திரன் இயக்கியுள்ள ‘சிவ சிவா’ படத்தின் தலைப்பைப் படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.

சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் வெற்றிக்குப்பிறகு இயக்குநர் சுசீந்திரன் ஜெய் நடிப்பில் ’சிவ சிவா’ படத்தினை இயக்கி முடித்துள்ளார். ஜெய்யின் 30 வது படமாக உருவாகும் இப்படத்தில், ஜெய் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரதிராஜா, ஸ்ம்ருதி வெங்கட், திவ்யா துரைசாமி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் தலைப்பை ‘வீரபாண்டியபுரம்’ என்று மாற்றியுள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் சுசீந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இப்படத்தை பார்த்த என் நண்பர்கள் என்னையும் படத்தையும் பாராட்டினார்கள். அதேசமயம், என்னிடம் ஒரு வேண்டுகோளையும் வைத்தார்கள். ”‘சிவ சிவா’ படம் கிராமம் சார்ந்த கதைக்களம் என்பதால் படத்தின் தலைப்பை மண் சார்ந்து வைத்தால் கூடுதல் பலமாக இருக்கும்” என்றார்கள். அவர்கள் கூறியது சரி என்று பட்டதால் தயாரிப்பாளர் சம்மதத்துடன் ‘வீரபாண்டியபுரம்’ என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com