Arnold Vosloo - Ranabaali
Arnold VoslooRanabaali

விஜய் தேவரகொண்டா படத்தில் மம்மி பட வில்லன்! | Arnold Vosloo

1850–1900 காலகட்டத்தில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் தவறாக பழிசுமத்தப்பட்ட மனிதர்கள் ஆகியவற்றை பற்றி இப்படம் பேச உள்ளது.
Published on
Summary

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள 'ரணபலி' திரைப்படம், 19ஆம் நூற்றாண்டின் உண்மையான வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தில் 'தி மம்மி' புகழ் அர்னால்ட் வோஸ்லூ வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படம் செப்டம்பர் 11 அன்று வெளியாக உள்ளது.

விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ராகுல் சங்க்ரித்யன் இயக்கியுள்ள படம் ‘ரணபலி’. இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படம்  செப்டம்பர் 11 வெளியாகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

19ஆம் நூற்றாண்டு பின்னணியில் உருவான இந்த கதை 1854 முதல் 1878 வரை நடந்த உண்மையான வரலாற்று சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஹிட்லரின் இனப்படுகொலையை விட மோசமான கொலைகள், இந்தியாவின் பொருளாதார சுரண்டல் போன்ற வரலாற்று உண்மைகளையும், 1850–1900 காலகட்டத்தில் நிகழ்ந்த பல உண்மைச் சம்பவங்கள் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் திட்டமிட்டு வரலாற்றில் தவறாக சித்தரிக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் தவறாக பழிசுமத்தப்பட்ட மனிதர்கள் ஆகியவற்றை பற்றி இப்படம் பேச உள்ளது.

Arnold Vosloo - Ranabaali
ஜனநாயகன்| மத அடையாளத்துக்கு கண்டனம்.. சென்சார் போர்டுக்கு சாதகமாக தீர்ப்பு!

குறிப்பாக, சர் ரிச்சர்ட் டெம்பிள் என்ற அதிகாரி திட்டமிட்டு வறட்சியாக மாற்றப்பட்ட பகுதிகளில் மக்களுக்குச் செய்யப்பட்ட கொடுமைகள் மனதை உருக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ளனவாம்.

இப்படத்தில் ரணபலி பாத்திரத்தில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனா ’ஜெயம்மா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். ‘தி மம்மி’ படத்தின் மூலம் பிரபலமான அர்னால்ட் வோஸ்லூ, சர் தியோடோர் ஹெக்டர் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மூலம் அர்னால்ட் வோஸ்லூ தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Arnold Vosloo - Ranabaali
ரஜினி-கமல் படத்திலிருந்து ஏன் விலகினேன்..? லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com