The Marvels | மூவர் கலக்கும் 'தி மார்வெல்ஸ் ' டிரெய்லர்
ஹாட்ஸ்டாரில் வெளியான Ms Marvel தொடருக்கென பிரத்யேகமாக ரசிகர்கள் உருவாகும் அளவுக்கு அந்தத் தொடரை அமர்க்களப்படுத்தியிருந்தார் இமான் வெல்லனி. அவர் ஏற்றிருந்த கமாலா கான் கதாபாத்திரத்தை அவரைவிட சிறப்பாக இனி யாரும் நடிக்க முடியாது என்னும் அளவுக்கு சிறப்பாக நடித்திருந்தார். அந்த தொடரின் கடைசி எபிசோடில் ப்ரீ லார்சனை கேமியோ செய்ய வைத்து, அடுத்து வரவிருக்கும் படத்துக்கான சின்ன டீசரை அன்றே காட்டியிருந்தார்கள். தற்போது , தி மார்வெல்ஸ் படத்தின் டிரெய்லரை அந்த இடத்தில் இருந்தே தொடங்கியிருக்கிறார்கள்.
மார்வெல்லுக்கே உரித்தான காமெடி கதகளியை டிரெய்லர் முழுக்கவே ஆடியிருக்கிறார்கள். அவர் இடத்தில் இவர், இவர் இடத்தில் அவர் என நபர்கள் மாறிவிட, எப்படி மூவரும் சேர்ந்து எதிரிகளை எதிர்கொள்கிறார்கள் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன்.
நியா டகோஸ்டாவின் இயக்கத்தில் வெளிவரும் இப்படத்தில் ப்ரி லார்சன், டெயோனா பாரிஸ், இமான் வெல்லானி, சாமுவேல் எல். ஜாக்சன், ஜாவே ஆஷ்டன் மற்றும் பார்க் சியோ-ஜூன் ஆகியோர் நடித்துள்ளனர். கெவின் ஃபைஜ் இப்படத்தைத் தயாரித்துள்ளார். லூயிஸ் டி எஸ்போசிடோ, விக்டோரியா அலோன்சோ, மேரி லிவனோஸ் மற்றும் மேத்யூ ஜென்கின்ஸ் ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாக பணியாற்றுகின்றனர். மேகன் மெக்டோனல், நியா டகோஸ்டா, எலிசா கராசிக் மற்றும் ஜெப் வெல்ஸ் ஆகியோர் இப்படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளனர்.
The Marvels Trailer
மார்வெல் ஸ்டுடியோவின் “தி மார்வெல்ஸ்” நவம்பர் 10 ஆம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.