\
தெறிக்கும் இசை - ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரவணா ஸ்டோர்ஸ் சரவணின் `தி லெஜண்ட்’ மோஷன் போஸ்டர்

தெறிக்கும் இசை - ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரவணா ஸ்டோர்ஸ் சரவணின் `தி லெஜண்ட்’ மோஷன் போஸ்டர்

தெறிக்கும் இசை - ஆக்‌ஷன் காட்சிகளுடன் சரவணா ஸ்டோர்ஸ் சரவணின் `தி லெஜண்ட்’ மோஷன் போஸ்டர்
Published on

'சரவணா ஸ்டோர்ஸ்' சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் முதல் பார்வைக்கான போஸ்டர் வெளியாகியுள்ளது. அதனுடன் படத்தின் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்கள் படக்குழுவினர்.

தனது கடை தொடர்பான விளம்பரங்களில் மட்டுமே நடித்து வந்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன், தற்போது ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டை இயக்குநர்கள் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். கோலிவுட்டின் ட்ரெண்டிங் நகைச்சுவை நடிகர் யோகிபாபு, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஹாரிஸின் இசையில், ஆக்‌ஷன் காட்சியொன்று மோஷன் போஸ்டராக வெளியாகியிருக்கிறது.

இப்படத்துக்கான காட்சிகள், பிரம்மாண்டமாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com