நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மறைந்த நடிகர் சந்திரஹாசனின் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மறைந்த நடிகர் சந்திரஹாசனின் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் மறைந்த நடிகர் சந்திரஹாசனின் ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’
Published on

நடிகர் கமல்ஹாசனின் அண்ணனும் மறைந்த நடிகருமான சந்திரஹாசன் கடைசியாக நடித்த ‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

நடிகர் கமல்ஹாசனுக்கு சாருஹாசன், சந்திரஹாசன் என இரண்டு அண்ணன்கள். அதில், கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்த நடிகர் சந்திரஹாசன் கடந்த 2017 ஆம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார். அவர், உயிரிழப்பதற்கு முன்பு ‘அப்பதாவ ஆட்டைய போட்டுட்டாங்க’ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தப் படம்தான் தற்போது வரும் அக்டோபர் 8 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், ”என் திறமையை வெளிப்படுத்தும் பேரார்வத்தில் தன்திறமையை திரையில் காட்டாமலே போய்விட்டவர் சந்திரஹாசன்.அவர் நடித்த கடைசிபடம்‘அப்பத்தாவ ஆட்டைய போட்டுட்டாங்க’அக்டோபர் 8ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.என்னை வாழ்த்தியவரை வணங்க கடமைப்பட்டுள்ளேன் ‘ஐயா..அப்பா..உங்கள் படம் 8ம் தேதி ரிலீஸ்” என்றுக்கூறி படத்தின் டிரெய்லரையும் வெளியிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com