\
விஜயை மிகவும் அப்செட் ஆக்கிய சம்பவம் எது தெரியுமா..?

விஜயை மிகவும் அப்செட் ஆக்கிய சம்பவம் எது தெரியுமா..?

விஜயை மிகவும் அப்செட் ஆக்கிய சம்பவம் எது தெரியுமா..?
Published on

வெளியில் அமைதியானவராக காட்டிகொண்டாலும் தன்னுடன் நெருங்கிப்பழகியவர்களிடம் கலகலப்பாக இருப்பது விஜயின் வழக்கம். எளிதில் கவலைகொள்ளாத அவரை மிகவும் அப்செட் ஆக்கிய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 
விஜயுடன் நெருங்கிப்பழகக் கூடியவரும், அவரது நடவடிக்கைகளை அறிந்தவருமான  பாண்டிச்சேரி மாநில முன்னாள் எம்.எல்.ஏவும் விஜய் நற்பணி மன்றத்தலைவருமான ஆனந்த் அதைப் பற்றிக் கூறுகையில், ‘’ விஜய் எப்போதும் ஜாலி மூடில்தான் இருப்பார். ஆனால், அவரது வாழ்க்கையில் தலைவா பட பிரச்னையின்போதுதான் அதிக மன உளைச்சலுக்கு ஆளானார். அந்த சமயத்தில் அவர் அளவுக்கதிகமாகவே அப்செட் ஆகி விட்டார். அதுவரை அவர் இப்படி இருந்து யாரும் பார்த்ததே இல்லை. அதேபோல் மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்ப்பதில் மகிழ்ச்சி கொள்ளும் வழக்கமுடையவர் விஜய். அவர் வசிக்கும் ஏரியாவில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களை அவ்வப்போது குடும்பத்துடன் அழைத்து தனது வீட்டில் விருந்து கொடுப்பார். ஆட்டோகாரர்களின் குழந்தைகளுடன் விளையாடி மகிழ்வார் என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com