\
அருண் விஜய்யின் ‘தடம்’ இந்தி ரீமேக்: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

அருண் விஜய்யின் ‘தடம்’ இந்தி ரீமேக்: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு

அருண் விஜய்யின் ‘தடம்’ இந்தி ரீமேக்: பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
Published on: 

தமிழில் வெற்றியடைந்த‘தடம்’ படத்தின் இந்தி ரீமேக்கின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘தடம்’ அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றானதோடு, அருண் விஜய்யை முன்னணி நடிகர்கள் வரிசைக்கு கொண்டு வந்தது. க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் இரட்டைக் கதாபாத்திரங்களில் மிரட்டினார் அருண் விஜய். அனைவராலும் பாராட்டப்பெற்ற ‘தடம்’ தற்போது இந்தியில் ரீமேக் ஆகிறது.

இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், இன்று படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. ஆதித்ய ராய் கபூர்,மிருணாள் தாக்கூர் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com