நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ஹேஷ்டேக்!
Published on

பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததை அடுத்து நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

நடிகர் சித்தார்த் அண்மையில் கொரோனா தடுப்பூசி குறித்தும் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்தும் ட்விட்டரில் கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். இதன் காரணமாக நடிகர் சித்தார்த் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவின் சார்பில் நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சித்தார்த்தின் போன் நம்பரை சமூக வலைதளங்களில் சிலர் பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தார்த், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் “என்னுடைய போன் நம்பரை பாஜகவினர் பரப்பிவிட்டுள்ளனர். எனக்கும் எனது குடும்பத்திற்கும் 500 க்கும் மேற்பட்ட வன்புணர்வு மற்றும் கொலை மிரட்டல் கால்கள் வருகின்றன. அவர்கள் பேசிய கால் ரெக்கார்டுகளையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளேன்” என்று பதிவிட்டிருந்தார். சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பலர் ஆதரவு குரல் எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், இந்திய அளவில் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com