\
ஏ.ஆர்.ரகுமானுக்கு பிரம்மாண்ட வெள்ளிவிழா - ஆந்திர அரசு திட்டம்

ஏ.ஆர்.ரகுமானுக்கு பிரம்மாண்ட வெள்ளிவிழா - ஆந்திர அரசு திட்டம்

ஏ.ஆர்.ரகுமானுக்கு பிரம்மாண்ட வெள்ளிவிழா - ஆந்திர அரசு திட்டம்
Published on

ஏ.ஆர். ரகுமானுக்கு வெள்ளிவிழா நடத்த ஆந்திர அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

1992-ம் ஆண்டு ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமான ஏ.ஆர்.ரகுமான் திரையிசை உலகில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையொட்டி ரகுமானை கவுரவப்படுத்தும் விதமாக சந்திரபாபு நாயுடு தலைமையிலான சீமாந்திரா அரசு காக்கிநாடாவில் பிரமாண்ட விழா ஒன்றை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள இந்த விழா ரகுமானின் இசை நிகழ்ச்சியுடன் நடைபெறும் எனவும், அதில் அவருடன் பங்கேற்கும் கலைஞர்கள் தேர்வு விரைவில் நடைபெறவுள்ளதாகவும் ஆந்திர அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்காக, காக்கிநாடாவில், இரண்டு கோடி ரூபாய் செலவில் மேடை அமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com