BTS new album
BTS new albumBts Reentry

முடிவுக்கு வந்த 4 ஆண்டு காத்திருப்பு | மீண்டும் இணைந்த BTS.. புதிய ஆல்பத்தால் அதிரும் NETFLIX!

BTS குழு பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்ததைக் கொண்டாடும் வகையில் நடத்திய இசை நிகழ்ச்சி Netflix தளத்தில் உலகளவில் பெரும் சாதனைகளை படைத்துள்ளது.
Published on

உலகில் உள்ள ஜென்சி தலைமுறையையே தனது இசையால் கட்டிபோட்டுள்ள இசைக்குழு என்றால் அது தென்கொரியாவை சேர்ந்த BTS குழுதான். 2013-ஆம் ஆண்டு 7 நபர்களுடன் தொடங்கிய இவர்களின் பயணம் தற்போது ஒரு பெரும் இசை சாம்ராஜ்யமாக விரிவடைந்துள்ளது.

BTS army என்ற பெயரில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களும், இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான ரசிகர்களும் இந்தக் குழுவை வெறித்தனமாகக் கொண்டாடுகிறார்கள். 2 Cool 4 Skool என்ற பெயரில் கடந்த 2013-ஆம் ஆண்டு இவர்களின் முதல் இசை ஆல்பம் வெளியானது.

BTS new album
BTS new albumJUNG YEON-JE

அது பெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், 2016-ஆம் ஆண்டு வெளியான Wings ஆல்பத்தில் இடம்பிடித்திருந்த Blood Sweat & Tears பாடல் உலகளவில் பிரபலமானது. தொடர்ந்து இவர்கள் வெளியிட்ட Dynamite, Butter , Life Goes On போன்ற பாடல்கள் உலகளவில் பல்வேறு சாதனைகளை படைத்தது. அதிலும் Butter பாடல் வெளியான 24 மணிநேரத்தில் 108.2 மில்லியன் பார்வைகளைப் பெற்று கின்னஸ் சாதனை படைத்தது.

BTS குழுவினர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட கின்னஸ் உலக சாதனைகளை கைவசம் வைத்துள்ளார்கள் என்பதில் இருந்தே இவர்கள் படைத்த சாதனைகளை நாம் தெரிந்துகொள்ளலாம். சமீபத்தில் வெளியான ஒரு கணக்கெடுப்பில், ஒவ்வோர் ஆண்டும் சுமார் 8 லட்சம் சுற்றுலாப் பயணிகள் BTS குழுவினரைச் சந்திக்க வாய்ப்பிருக்கும் என்பதற்காகவே தென்கொரியாவிற்கு வருகிறார்கள் என்று கூறப்பட்டிருந்தது.

தென்கொரியாவில் 18 முதல் 28 வயதிற்குள் உள்ளவர்கள் குறைந்தது 18 முதல் 21 மாதங்கள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் என்பது கட்டாயம். இதன் காரணமாக கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து இவர்களில் ஒவ்வொருவராக ராணுவத்தில் இணைந்து பணியாற்றினர். இதனால் இவர்கள் புதிதாக எந்த ஆல்பமும் வெளியிடாமல் இருந்தனர்.

BTS new album
BTS new albumஎக்ஸ் தளம்

இந்த நிலையில், கடந்த ஜூன் 2025-ஆம் ஆண்டு இவர்களில் ராணுவ பனிக்காலம் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து புதிய ஆல்பத்தை வெளியிடும் பணியில் இவர்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்களின் அடுத்த ஆல்பம் எப்போது வெளியிடப்படும் என்ற உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்று BTS குழு தனது 14 பாடல்கள் கொண்ட 5-வது ஸ்டூடியோ ஆல்பமான ARIRANG-ஐ வெளியிட்டது. இந்த ஆல்பம் வெளியான முதல் நாளிலேயே சுமார் 40 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து தங்கள் குழு மீண்டும் இணைந்ததைக் கொண்டாடும் வகையில், தென்கொரியாவில் BTS குழு தனது முதல் நேரடி இசை நிகழ்ச்சியை நடத்தியது. இந்த நிகழ்ச்சி Netflix தளத்தில் உலகம் முழுவதும் நேரலையாக ஒளிபரப்பப்பட்ட நிலையில், இதனை 7.5 கோடி பேர் நேரலையில் பார்த்துள்ளனர். இது முந்தைய சாதனையான 'Tudum' நிகழ்வின் சாதனையை முறியடித்துள்ளது. இதன் மூலம் Netflix தளத்தில் தனிப்பட்ட இசை நிகழ்ச்சிக்கு வந்த அதிகபட்ச பார்வையாளர்கள் என்ற சாதனையை இந்த நிகழ்ச்சி பிடித்துள்ளது.

BTS new album
BTS new albumஎக்ஸ் தளம்

இது தவிர BTS குழு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா என மொத்தம் 34 நாடுகளில் 82 இசை நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது உலகளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

BTS new album
4000 KM வரை தாக்க முடியும்.. அமெரிக்காவை அலறவிட்ட ஈரான்.. London, Paris நகரங்களுக்கே ஆபத்து!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com