ஒரு கோடியே 80 லட்சத்தை தாண்டிய ஜூராசிக் பார்க் டிரெய்லர்

ஒரு கோடியே 80 லட்சத்தை தாண்டிய ஜூராசிக் பார்க் டிரெய்லர்
ஒரு கோடியே 80 லட்சத்தை தாண்டிய ஜூராசிக் பார்க் டிரெய்லர்

ஜூராசிக் வேர்ல்டு - ‌ஃபாலன் கிங்டம் திரைப்படத்தின் டிரெய்லருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 

ஜூராசிக் பார்க் திரைப்பட வரிசையின் 5ஆம் பாகமாக ஜூராசிக் வேர்ல்டு - ‌ஃபாலன் கிங்டம் திரைப்படத்தின் டிரெய்லர் டிசம்பர் 7-ம் தேதி வெளியானது. டிரெய்லர் வெளியான ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இணையதளத்தில் டிரெய்லரை பார்த்து ரசித்துள்ளனர். இரண்டு நாட்கள் ஆகியுள்ள நிலையில் ஒரு கோடியே 80 லட்சத்துக்கும் அதிகமானோர் டிரெய்லரை பார்த்துள்ளனர்.

1993ல் இயக்குநர் ஸ்டீஃபன் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான ஜூராசிக் பார்க் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக 4ஆம் பாகமான ஜூராசிக் வேர்ல்டு 2015ஆம் ஆண்டு வெளியான நிலையில், ஜூராசிக் வேர்ல்டு - ‌ஃபாலன் கிங்டம் வரும் 2018 ஜூன் மாதம் 22-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதனை ஜே.ஏ. பயோனா இயக்கியுள்ளார்.

கிறிஸ் ப்ரட் மற்றும் பிரைஸ் டல்லாஸ் ஹோவர்ட் போன்றோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில், டைனோசர்களுடன் எரிமலைகள் வெடித்துச் சிதறும் ஆபத்தும், கதாநாயகனையும் நாயகியையும் சூழும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com