\
வெளியானது அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல்

வெளியானது அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல்

வெளியானது அஜித்தின் ‘அடிச்சி தூக்கு’ பாடல்
Published on

‘விஸ்வாசம்’ படத்தில் இடம்பெற்றுள்ள ''அங்காளி பங்காளி'' எனத்தொடங்கும் ‘அடிச்சி தூக்கு’ பாடலை படக்குழு வெளியிடுள்ளது. 

அஜித்துடன் இயக்குநர் சிவா ‘விஸ்வாசம்’ படத்தின் மூலம்  4வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். எனவே அதிகமான எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியது. இந்தப் படம் பொங்கல் அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘பேட்ட’ படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதனால் வரும் பொங்கல் அஜித்-ரஜினி மோதும் பொங்கலாக பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் நவம்பர் 27 ஆம் தேதி படக்குழுவினர் வெளியிட்டனர். எந்த முன்னறிவிப்பும் இன்றி திடீரென்று மோஷன் போஸ்டர் விடப்பட்டாலும் வழக்கம்போல் அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். போஸ்டர் வெளியாகி சிறிது நேரத்தில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டானது. 

‘விஸ்வாசம்’ படத்தின் அறிவிப்புக்குப் பின் தங்களது அறிவிப்பை வெளியிட்ட ‘பேட்ட’ படத்தின் படக்குழு அடுத்தடுத்து அப்டேட் கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இரண்டு பாடல்களை வெளியிட்ட ‘பேட்ட’ படக்குழு நேற்று முழு பாடல் ஆல்பத்தை வெளியிட்டது. 

இந்நிலையில் ‘விஸ்வாசம்’ அப்டேட் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தயாரிப்பு நிறுவனத்துக்கு அழுத்தம் கொடுத்து வந்தனர். உடனே இன்று மாலை ‘அடிச்சு தூக்கு’ பாடல் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது. ஆகவே முதல் பாடலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். #AdchiThooku என்ற ஹேஸ்ட்டேக்கையும் இந்திய அளவில் ட்ரெண்ட் செய்ய தொடங்கினர். 

இந்நிலையில் மாலை பாடல்  வெளியானது. முழுக்க முழுக்க குத்துப்பாடலாக  இந்தப் பாடல் உருவாகியுள்ளது. இசையமைப்பாளர் இமான் இந்தப் பாடலை பாடியுள்ளார். ''அங்காளி பங்காளி'' எனத் தொடங்கும் பாடலை பாடலாசியர் விவேகா எழுதியுள்ளார். 

''செம சீனா செதற வைக்கணும், பாத்தா பதற வைக்கணும், அப்பதாண்டா நீ என் ஆளு'', ''மங்காத்தா கட்ட போல இந்த
வட்டாரம் நம் கையில் புடி புடி'' போன்ற வரிகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com