‘சர்கார்’ சிங்கிள் டிராக் 24-ம் தேதி வெளியாகுகிறது..!
விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் சிங்கிள் டிராக் வரும் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ’சர்கார்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் தொழிலதிபராக இருந்து அரசியலில் குதிப்பவராக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதையடுத்து அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இதன் இசை வெளியீட்டு விழா நடக்க இருக்கிறது. இதனைத் தொடர்ந்து தீபாவளிக்கு படம் வெளியாகிறது.
இந்நிலையில் ‘சர்கார்’ படத்தினர் சிங்கிள் டிராக் வரும் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஏற்னவே சர்கார் படம் குறித்த முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகும் என படக்குழுவினரால் நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து உற்காசம் அடைந்த ரசிகர்கள் அந்த அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் சிங்கிள் டிராக் வரும் 24-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் இதுதொடர்பான போஸ்டரை ஷேர் செய்து வருகின்றனர். அத்தோடு மட்டுமின்றி #SarkarSingleOn24th என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.