ஜூலை 15-ல் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்?

ஜூலை 15-ல் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்?

ஜூலை 15-ல் வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக்?
Published on

அஜித்தின் ‘வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 15 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். போனி கபூர், அஜித் பிறந்தநாளான கடந்த மே 1 ஆம் தேதி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று அறிவித்தார். ஆனால், கொரோனாவை காரணம் காட்டி மற்றொரு நாளில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். தற்போது, கொரோனா குறைந்துவிட்டதால் மீண்டும் வலிமை அப்டேட் கேட்கத்தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித் ரசிகர்கள் ‘வலிமை அப்டேட்’ என்று எழுதிய பதாகைகளை தூக்கிக்காட்டினர். யூரோ கோப்பை கால்பந்து போட்டியிலும் ‘வலிமை’ அப்டேட் கேட்டு அதிர வைத்தனர்.

இந்த நிலையில் ’வலிமை’ ஃபர்ஸ்ட் லுக் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் ஜூலை 15 ஆம் தேதி ’வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும் மோஷன் போஸ்டரும் வெளியாகலாம் என்று ஏஜிஎஸ் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com