சினிமா
இறுதிக்கட்டத்தில் ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பு: உக்ரைன் சென்ற ராஜமௌலி குழு
இறுதிக்கட்டத்தில் ஆர்.ஆர்.ஆர். படப்பிடிப்பு: உக்ரைன் சென்ற ராஜமௌலி குழு
எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு உக்ரைன் நாட்டில் தொடங்குகிறது.
ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன் நடிப்பில் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். வரலாற்று புனைவு கதை அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கான வேலைகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. அதேபோல் படப்பிடிப்பு தொடங்கி மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இந்த நிலையில் தற்போது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக எஸ்.எஸ்.ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர் உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு ஒரு பாடல் படமாக்கப்படுகிறது. அத்துடன் அந்த திரைப்படத்திற்கான அனைத்து படப்பிடிப்புகளும் நிறைவடைகிறது. மேலும் இந்த மாத இறுதிக்குள் அனைத்து வேலைகளையும் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். ஒரு புறம் படப்பிடிப்பு நடைபெற்று வரும் அதேவேளையில், இன்னொருபுறம் படப்பிடிப்பு பிந்தைய வேலைகளும் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.