கார்த்தியின் 25 ஆவது படம்.. 'ஜப்பான்' ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் குவிந்த சினிமா பிரபலங்கள்!

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படமான ’ஜப்பான்’ திரைப்படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டது படக்குழு. மேலும் பல திரைப்பிரபலங்கள் இதில் பங்குபெற்றனர்.
ஜப்பான் திரைப்படம்
ஜப்பான் திரைப்படம்புதிய தலைமுறை

கார்த்தி நடிப்பில் வெளியான ’ஜப்பான்’ படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிக்கும் திரைப்படம் ’ஜப்பான்’.

இதில் அனு இமானுவேல், தெலுங்கு நடிகர்சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

ஜப்பான் திரைப்படம்
’எல்லை மீறும் விமர்சனங்கள்’ - 7 யூடியூபர்கள், vlogger மீது புகார்.. மலையாள திரைப்பட உலகில் பரபரப்பு

திருச்சியில் நடந்த உண்மை சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு இப்படத்தின் திரைக்கதை உருவாகியுள்ளது. இப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மேலும் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடத்த அனைவரும் தங்களது அனுபவம் குறித்து பரிமாறி கொண்டர்.

மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் சத்திய ராஜ்,அவரது மகன் நடிகர் சிபி ராஜ், விஷால், ஆரியா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com