இது “சர்கார்” தீபாவளி..... ரசிகர்கள் கொண்டாட்டம்

இது “சர்கார்” தீபாவளி..... ரசிகர்கள் கொண்டாட்டம்

இது “சர்கார்” தீபாவளி..... ரசிகர்கள் கொண்டாட்டம்
Published on

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விஜய் நடிப்பில் திரைக்கு வந்துள்ள 'சர்கார்' திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய திரைப்படங்களை காண திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர். நடிகர் விஜய் நடித்த “சர்கார்”  திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று வெளியாகியிருக்கிறது. விஜய் ரசிகர்கள் சர்கார் படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் விஜய்யின் சர்கார் படத்தைக் காண அதிகாலை முதலே ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்தனர். பல தடைகளைத் தாண்டி சர்கார் திரைப்படம் திரைக்கு வந்திருப்பது தங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக விஜய் ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் சர்கார் டிக்கெட் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் நிலையில், டிக்கெட் கிடைக்காததால் ஒரு சிலர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

சென்னையில் உள்ள திரையரங்குகளுக்கு வெளியே திருவிழாக்கோலம் போல வெடி வெடித்து மேளம் அடித்து ரசிகர்கள் உற்சாகமாக சர்கார் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com