\
நாளை வெளியாகும் ‘மாரி2’ ட்ரெய்லர்

நாளை வெளியாகும் ‘மாரி2’ ட்ரெய்லர்

நாளை வெளியாகும் ‘மாரி2’ ட்ரெய்லர்
Published on

‘மாரி2’ ட்ரெய்லர் நாளை வெளியாகும் என இயக்குநர் பாலாஜிமோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலாஜிமோகன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம் மாரி. 2015 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. ஆனால் தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து மாரி படத்தின் இரண்டாம் பாகம் ‘மாரி2’ என்ற பெயரில் வெளியாகயுள்ளது.

‘மாரி2’ படத்தில் தனுஷ், சாய் ‌பல்லவி ஆகியோருடன் வரலட்சுமி, மலையாள நடிகர் டோவினோ தாமஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனுஷ்-யுவன் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் இப்படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு திரை ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்நிலையில் ‘மாரி2’ படத்தின் டிரெய்லர் நாளை வெளியாயுள்ளதாக இயக்குநர் பாலாஜிமோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதனையடுத்து இத்திரைப்படம் இம்மாதம் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவாளராக பனியாற்றியுள்ளார். 

மாரி முதல் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாக பாடல்களும் பெரிய வரவேற்பை பெரும் என எதிர்ப்பாக்கப்படுகிறது. இசைஞானி இளையராஜா ‘மாரி2’வில் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com