நாளை வெளியாகவுள்ள 'லைட்இயர்' படத்திற்கு 14 நாடுகளில் தடை: பின்னணி என்ன?

நாளை வெளியாகவுள்ள 'லைட்இயர்' படத்திற்கு 14 நாடுகளில் தடை: பின்னணி என்ன?
நாளை வெளியாகவுள்ள 'லைட்இயர்' படத்திற்கு 14 நாடுகளில் தடை: பின்னணி என்ன?

நாளை வெளியாகவுள்ள 'லைட்இயர்' திரைப்படம் 14 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.

டிஸ்னி மற்றும் பிக்சார் நிறுவனம் இணைந்து தயாரித்து 1995-ல் வெளியான 'டாய் ஸ்டோரி' என்னும் அனிமேஷன் படம் உலகம் முழுவதும் குழந்தைகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் கார்ட்டூன் வடிவிலும் 3டி அனிமேஷன் திரைப்பட வடிவிலும் வெளியாகின. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற 'பஸ் லைட்இயர்' என்ற கதாபாத்திரம் உலகமெங்கும் பிரபலமானது.

தற்போது இதே கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு 'லைட் இயர்' என்ற படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் தன்பாலின முத்தக்காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், இது அரபு நாட்டின் நம்பிக்கைகளுக்கு எதிராக உள்ளது என்று கூறி சவுதி அரேபியா, எகிப்து, இந்தோனேசியா உள்ளிட்ட 14 நாடுகள் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com