"சொல்ல முடியாத துயரம்..." - நிதிச் சிக்கலால் தவிக்கும் 'தி ஃபேமிலி மேன்' நடிகர் ஷாஹாப் அலி

"சொல்ல முடியாத துயரம்..." - நிதிச் சிக்கலால் தவிக்கும் 'தி ஃபேமிலி மேன்' நடிகர் ஷாஹாப் அலி
"சொல்ல முடியாத துயரம்..." - நிதிச் சிக்கலால் தவிக்கும் 'தி ஃபேமிலி மேன்' நடிகர் ஷாஹாப் அலி

'தி ஃபேமிலி மேன்' தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஷாஹாப் அலி, தாம் பொருளாதார ரீதியாக நிறைய சிக்கலில் இருப்பதாக உருக்கமாக பேசியிருக்கிறார்.

'தி ஃபேமிலி மேன்' தொடரின் இரண்டாம் பாகம் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டது. இதில் நடித்த மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, சமந்தா ஆகியோரின் கதாபாத்திரங்கள் பேசப்பட்டது போல் ஷாஹாப் அலி என்பவரின் கதாபாத்திரமும் அதிக அளவில் பேசப்பட்டது. இந்த ஷாஹாப் அலி கொரோனா லாக்டவுனால் தாம் மிகவும் பாதிக்கப்பட்டது குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். கொரோனா பேரிடர் அனைவருக்கும் உடல் ரீதியாக மட்டுமல்லாமல், நிதி ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிதி நெருக்கடியால் ஏராளமானோர் வேலை இழந்து தங்களின் பணி இருப்பிடத்தை விட்டு சொந்த ஊரை நோக்கி செல்ல நேர்ந்தது. சாமானியர்களைத் தவிர, சில நடிகர்களும் தொற்றுநோய்களுக்கு மத்தியில் ஏராளமான நிதிப் போராட்டங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவராக ஷாஹாப் அலியும் தான் பட்ட கஷ்டங்களை பகிர்ந்துள்ளார்.

" 'தி ஃபேமிலி மேன்' தொடரின் வெளியீட்டுக்கு முன்பு, நான் சொல்ல முடியாத துயரத்தில் இருந்தேன். நான் பணிபுரிந்த அனைத்து திட்டங்களும் கொரோனா காரணமாக நிறுத்தப்பட, மும்பையில் நான் தங்கியிருந்த பிளாட்டை காலி செய்து சொந்த வீட்டுக்கு செல்ல நேர்ந்தது. இன்னும் எனது வீட்டில்தான் இருக்கிறேன்.

`தி ஃபேமிலி மேன்' தொடர் இப்போது வெளியாகிவிட்டது. இனி எல்லாம் மாறும் என்று நம்புகிறேன். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவன் நான். பொருளாதாரம் எப்போதும் எனக்கு கடினமாகவே இருந்து வருகிறது. இன்னும் அது தொடர்கிறது.

இனி எல்லாமே அடுத்து நடக்கப்போவதை பொறுத்துதான் இருக்கிறது. ஆரம்பத்தில் இசை நிகழ்ச்சிகள்தான் என் குடும்பத்துக்கு உறுதுணையாக இருக்கவும்,என் கனவைத் தொடரவும் வைத்தது. அது கொடுத்த தைரியத்தில்தான் நான் மும்பைக்கு வர விரும்பினேன். ஆனால், விரைவாகவே நான் அங்கு இருக்க முடியாது என்று அறிந்தேன். டெல்லியில் இருந்து மும்பைக்கு வருவது எனக்கு ஒரு பெரிய படியாக இருந்தது. இசை கொடுத்த நம்பிக்கையால்தான் அதனை சாத்தியப்படுத்தினேன்" என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com