\
'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை

'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை
Published on

பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை 'பிஎம் நரேந்திர மோடி' என்ற பெயரில் ஓமங்குமார் என்பவர் இயக்கியுள்ளார். சந்தீப் சிங் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் மோடியாக பிரபல பாலிவுட் நடிகர் விவேக் ஓபரார் நடித்துள்ளார். இந்தப்படம் நாடாளுமன்ற தேர்தலை குறி வைத்தே எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்த நிலையில் தேர்தல் ஆதாயத்திற்காக பல காட்சிகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினர். 

தனிடையே டெல்லி உயர்நீதிமன்றத்தில் பல பேர் பி.எம்.நரேந்திர மோடி படத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர். இதுகுறித்த விசாரணையில் தேர்தல் விதிமுறைகளை இந்தப் படம் மீறுவதாக நாங்கள் கருதவில்லை எனவும் ‘பி.எம்.நரேந்திர மோடி’ படத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறி நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

 படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதற்கிடையே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் இன்று காலை படத்துக்கு ’யூ’ சான்றிதழ் வழங்கப்பட்டு படம் நாளை வெளியாகும் என கூறப்பட்டது. 

இந்நிலையில் பிஎம் நரேந்திர மோடி திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. படத்தை ஆராய தேர்தல் ஆணையம் சார்பில் குழு அமைக்கப்பட உள்ளதாகவும், குழு ஆராய்ந்து அறிக்கை அளித்த பின்னரே படத்தை வெளியிடுவது குறித்து தெரிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com