ஆவணப்படமாகிறது ஜுராசிக் பார்க் புகழ் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை

ஆவணப்படமாகிறது ஜுராசிக் பார்க் புகழ் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை

ஆவணப்படமாகிறது ஜுராசிக் பார்க் புகழ் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை
Published on

ஜுராசிக் பார்க், ஜாஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் குறித்த ஆவணப்படம் அமெரிக்காவில் தயாராக உள்ளது.

இரண்டு ஆஸ்கார்களை வென்ற புகழ் பெற்ற இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் வாழ்க்கை ஆவணப்படமாக தயாராகிறது. HBO நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளது. திரையுலக அனுபவங்களை திரை வழியாகவே பகிர்ந்து கொள்வது வித்தியாசமாக இருப்பதாக ஸ்பீல்பெர்க் தெரிவித்துள்ளார். மேலும், திரைப்பட அனுபவங்கள் மட்டுமல்லாது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களையும் இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்து கொள்ள உள்ளதாக அவர் கூறியுள்ளார். ஸ்பீல்பெர்க்கின் இந்த ஆவணப்படம் அவரின் தீவிர ரசிகர்களுக்கு வித்தியாச அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com