\
நடிகை பானுப்பிரியா மீது தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் புகார்

நடிகை பானுப்பிரியா மீது தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் புகார்

நடிகை பானுப்பிரியா மீது தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் புகார்
Published on: 

14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்திய விவகாரத்தில் நடிகை பானுப்பிரியா மீது தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை பானுப்பிரியா. இவரது வீட்டில் வேலை பார்த்த சிறுமி, சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டதாக சிறுமியின் பெற்றோர் சமீபத்தில் புகார் அளித்தனர். அதேபோல் வீட்டில் இருந்த நகைகளை சிறுமி திருடியதாக நடிகை பானுப்பிரியாவும் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, தனது மகள் பணத்தை திருடி தன்னிடம் தந்ததாக சிறுமியின் தாயார் ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை பாண்டிபஜார் காவல்துறையினர் இ‌ருவரையும் கைது செய்தனர். சிறுமியின் தாய் புழல் சிறையிலும், 14 வயது சிறுமி சமூக நலத்துறையின் கூர்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் நடிகை பானுப்பிரியா மீது தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 14 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அமர்த்தி, சிறுமியை சித்ரவதை செய்ததாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து, குழந்தை தொழிலாளர் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com