காதலித்து ஏமாற்றிய நடிகர்... புலம்பும் பிரபல நடிகை

காதலித்து ஏமாற்றிய நடிகர்... புலம்பும் பிரபல நடிகை

காதலித்து ஏமாற்றிய நடிகர்... புலம்பும் பிரபல நடிகை
Published on

நடிகர் ஹிர்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக நடிகை கங்கனா ரனவத் தெரிவித்துள்ளார். 

எதையும் வெளிப்படையாக கூறுவிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது ஹிந்தி நடிகை கங்கனா ரனவத்துக்கு வாடிக்கையாகி விட்டது. தற்போது திருமணமான நடிகர் ஹிர்த்திக் ரோஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ‘நானும், ஹிர்திக் ரோஷனும் காதலித்தோம். அவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி இருப்பதால் என்னை திருமணம் செய்ய மறுத்து விட்டார். வெளியே தெரியாமல் காதலை தொடரலாம் எனக் கூறினார். திருமணம் இல்லாத காதல் அர்த்தமற்றது என அவரை தவிர்த்தேன். பின்னர் அவர் என்னிடம் தன் மனைவியை விவாகரத்து செய்யபோகிறேன்.  நாம் திருமணம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தார். அப்போது வேறு நடிகையுடன் அவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது. நான் காதல் தோல்வியில் இருந்தாலும் குயின் படம் வெளியாகி வெற்றி பெற்றது. எனக்கு போன் செய்து வாழ்த்து தெரிவித்தார். மீண்டும் காதலிக்குமாறு வற்புறுத்தினார். நான் மறுத்ததால் படம் வெற்றி பெற்ற கர்வத்தில் பேசுகிறாயா என கேட்டார். 


இதனையடுத்து எங்கள் காதல் விவகாரத்தை வெளியுலகிற்கு வெளிப்படையாகச் சொன்னேன். “ஹிருத்திக் ரோஷன் பெரிய செல்வந்தர் குடும்பத்தை சேர்ந்தவர். அவர் குடும்பம் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்” என்று மிரட்டினார்கள்.  அதன்பிறகு நான் ஹிருத்திக் ரோஷனுக்கு எழுதிய கடிதங்களையும் எனது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் இணையதளத்தில் வெளியிட்டு அசிங்கப்படுத்தினார்கள். 


இதுகுறித்து மகளிர் ஆணையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு நடிகைக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண பெண்கள் நிலையை எண்ணிப்பாருங்கள்” எனத் தெரிவித்துள்ளார். கங்கனா ரனவத் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக தாம்தூம் படத்தில் நடித்துள்ளார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com